News March 31, 2025
கோடை மழை வெளுக்கப் போகுது

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கோடை மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்று கூறியிருக்கும் அவர்கள், இதனால் வெப்பம் சற்று தணியும் என்றும் தெரிவித்துள்ளனர். வழக்கமாக, ஏப்ரல் – மே மாதங்களில் பெய்யும் கோடை மழையை விட இந்தாண்டு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 2, 2025
முன்னாள் எம்.பி. முருகேசன் உடல் தகனம்!

உடல்நலக்குறைவால் மறைந்த சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் அ.முருகேசன் (87) உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக சிதம்பரம் மாரியப்பன் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முன்னாள் காங்., தலைவர் K.S.அழகிரி, திருமா, திமுக நிர்வாகிகள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
News April 2, 2025
வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு பின்பு வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரியில் மக்களவைத் தலைவரிடம் அறிக்கையைக் கூட்டுக் குழு சமர்ப்பித்தது. அறிக்கை கடந்த பிப்., மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
News April 2, 2025
சூர்யா படத்தால் கார்த்தி படத்திற்கு சிக்கல்

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் தான் 2024 நவம்பரிலேயே டீசர் வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த படம் எப்போதும் வெளியாகும் என தெரியவில்லை. இப்படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், ‘கங்குவா’, ‘தங்கலான்’ தோல்வியால் நிதிச் சிக்கலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த பஞ்சாயத்தை முடித்தால் மட்டுமே கார்த்தி படம் வெளியாகுமாம்.