News March 18, 2024
‘கரும்பு விவசாயி’ சின்னம் இன்று விசாரணை

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் இவ்வழக்கை இன்று காலை அவசர வழக்காக விசாரிக்கிறது.
Similar News
News October 30, 2025
சாப்பிட்டதும் இத உடனே பண்ணாதீங்க!

நம்மில் பலரும் சாப்பிட்ட உடன் பல வேலைகளை உடனடியாக செய்வோம். சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்று நினைத்து நாம் செய்யும் சில செயல்கள், உண்மையில் நமது செரிமான மண்டலத்தைப் பெரிதும் பாதித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கக்கூடியவை என்பது பலருக்கு தெரிவதில்லை. அப்படி சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள மேலே SWIPE பண்ணி பாருங்க…
News October 30, 2025
வங்கி கடன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்

அக்டோபர் மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதத்தை 0.05 சதவீதம் வரை குறைத்துள்ளன. இதன் விளைவாக, இந்த வங்கிகளில் வீடு மற்றும் வாகன கடன் பெற்றவர்களின் மாதாந்தர தவணை (EMI) நவம்பர் மாதம் முதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News October 30, 2025
Currency, Airport இல்லை.. ஆனால் உலகின் பணக்கார நாடு இது!

லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) சுவிட்சர்லாந்தின் நாணயத்தையே பயன்படுத்துகிறது. 38,000 பேர் மட்டுமே வசித்தாலும், தனிநபர் ஆண்டு வருமானம் சுமார் ₹1.75 கோடியாம். இது USA, ஜப்பானை விட அதிகம். வரி குறைவு என்பதால், பல முன்னணி நிறுவனங்களும் இங்கு தொழில் தொடங்குகின்றன. மேலும், உயர் கல்வி & தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், வலுவான வங்கித் துறை ஆகியவற்றால் ஐரோப்பாவின் 2-வது பணக்கார நாடாக லிச்சென்ஸ்டீன் உள்ளது.


