News August 24, 2024
BA பாடபுத்தகத்தில் தூய்மை பணியாளரின் பாடம்

கோழிக்கோடு பல்கலை.யில் BA, MA பாடத்திட்டத்தில் தூய்மை பணியாளரான தனுஜா குமாரி எழுதிய புத்தகம் இடம்பெற்றுள்ளது. தனுஜா தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை ‘செங்கல் சூளையிலே என்ட ஜீவிதம்’ என்ற புத்தகமாக எழுதியுள்ளார். சுதந்திர தினத்தன்று கேரள ஆளுநர் அவரை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த வாழ்க்கை தனக்கு என்ன கொடுத்ததோ அதை புத்தகமாக எழுதியதாகவும், அது இலக்கியம் அல்ல, தன் வாழ்க்கை என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
டாக்டர்கள் பச்சை ஆடை அணிவது ஏன் தெரியுமா?

அறுவை சிகிச்சைகளின்போது டாக்டர்கள் பச்சை/நீல நிறங்களில் உடை அணிவதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. 1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சர்ஜரியின்போது டாக்டர்கள் வெகு நேரம் ரத்தத்தை(சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம். எனவே பச்சை/நீல நிறங்களை பார்ப்பது கண்களுக்கு இதமாக இருக்கும் என்பதால் இந்த நிறங்களில் அவர்கள் உடை அணிகின்றனர். SHARE.
News December 8, 2025
இரவிலும் உறங்காமல் உழைக்கிறேன்: மு.க.ஸ்டாலின்

எத்தனை எதிரிகள் வந்தாலும் TN-ஐ மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான் என ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மா.செ.க்கள், நகரம், ஒன்றியம், பேரூர் நிர்வாகிகளிடம் பேசிய அவர், இந்த ஆட்சியின் சிறப்பான பணிகளை பார்த்து நடுநிலை வாக்காளர்களும் ஆதரவாக நிற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் இரவிலும் உறங்காமல் உழைப்பதாகவும், அதேபோல அனைவரும் அப்படி உழைக்க வேண்டும் எனவும் திமுகவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 8, 2025
இந்திய அணிக்கு 10% அபராதம் விதித்த ICC

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ODI தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தது. இதில் 2-வது போட்டியில் இந்திய அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், ICC அபராதம் விதித்துள்ளது. போட்டி கட்டணத்தில் இருந்து 10% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SA இடையேயான டி20 தொடர் நாளை கட்டாக்கில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


