News January 6, 2025

தகனம் செய்யப்பட்டவர் உயிரோடு வந்த வினோதம்

image

மயிலாடுதுறை செல்வராஜ் (59) வேலை தேடி வெளியூருக்குச் சென்றார். பல நாள்கள் அவர் திரும்பி வராததால் உறவினர்கள் தேடத் தொடங்கினர். அப்போது ஊருக்கு அருகே உள்ள ஆற்றில் கிடந்த சடலத்தை செல்வராஜ்தான் என்று எண்ணி தகனம் செய்தனர். பின்னர் ஒருநாள் வேலை தேடிச் சென்ற செல்வராஜ் உயிரோடு வீடு திரும்பினார். இதனால், அதிர்ச்சியான உறவினர்கள் தகனம் செய்யப்பட்ட உடல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 13, 2025

உங்கள் மூளையை மெல்ல கொல்லும் 6 பழக்கங்கள்

image

உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உறுப்பை சில மோசமான பழக்கவழக்கங்களால் நாம் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மறதி, Brain Fog, தலைவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, உங்களது மூளையை கொல்லும் 6 மோசமான பழக்கங்கள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த தவறுகளை செய்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

News September 13, 2025

வெளிநாட்டு படங்கள் பார்த்தால் மரண தண்டனை

image

வடகொரியாவில் வெளிநாட்டு படங்களை பார்ப்பவர்களுக்கும், அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் நபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. உலகில் எங்கும் இல்லாத வகையில், வடகொரியாவில் மக்கள் அதீதமாக கண்காணிக்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இருந்து தப்பிய 300 பேர் கூறியதின் அடிப்படையில் ஐநா இதை கூறியுள்ளது.

News September 13, 2025

உலகில் இண்டர்நெட், ATM இல்லாத ஒரே நாடு

image

ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் 99% மக்கள் இண்டர்நெட்டையோ, சமூக வலைதளங்களையோ பயன்படுத்துவதில்லை. இங்கு இண்டர்நெட் ஸ்பீடு மிகமிக குறைவு. ஒரு சில இடங்களில் கஃபேக்களில் WIFI இருந்தாலும், அதன் வேகமும் மிக குறைவு தான். இந்நாட்டில் 1 மணி நேரம் இண்டர்நெட் பயன்படுத்த, இந்திய மதிப்பில் ₹100 செலவிட வேண்டும் என்பதால், மக்கள் அதை புறக்கணிக்கின்றனர். அதேபோல், இந்த நாட்டில் ATM வசதிகளும் இல்லை.

error: Content is protected !!