News October 20, 2025
அண்ணியை மனைவியாக்கும் விசித்திர வழக்கம்!

இமாச்சலில் உள்ள டிரான்ஸ்கிரி பகுதியில் வசிக்கும் ‘ஹட்டி’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. அதாவது, அச்சமூகத்தை சேர்ந்த ஆணுக்கு திருமணம் முடிந்ததுமே அவனது சகோதரர்கள் எத்தனை பேர் இருந்தாலும், அவர்களுக்கும் அப்பெண் மனைவியாகி விட வேண்டுமாம். வறுமையும், சொத்து பிரிந்துவிடக் கூடாது போன்ற காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த காலத்திலுமா இப்படி?
Similar News
News October 20, 2025
தீபாவளியன்று அயராத பணியில் நல் உள்ளங்கள்

தீபாவளி பண்டிகையை நாமெல்லாம் உற்சாகத்துடன் கொண்டாடும் வேளையில், குறிப்பிட்ட சில துறையை சேர்ந்தவர்கள் விடுப்பின்றி பணி செய்கின்றனர். டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போலீஸ், தீயணைப்பு துறையினர் இன்று அர்ப்பணிப்போடு கடமையை செய்து வருகின்றனர். நமக்காக பணியாற்றும் இந்த நல் உள்ளங்களுக்காக லைக் போட்டு நன்றி தெரிவிக்கலாமே.
News October 20, 2025
நாளை முதல் அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. அரசு அறிவிப்பு

பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருள்கள் இம்மாதமே வழங்கப்பட உள்ளது. தீபாவளி முடிந்த பிறகு நவம்பருக்கான ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாளை(அக்.21) முதல் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருள்களை விநியோகிக்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. SHARE IT
News October 20, 2025
தீபாவளி வாழ்த்து சொன்ன பாக்., பிரதமர்

பாகிஸ்தானில் உள்ள இந்து சமூகத்தினருக்கு, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘இந்த திருநாள் இருளை விலக்கி, ஒற்றுமையை வளர்த்து, அமைதி, அன்பு, அனைவருக்குமான செழிப்பை நோக்கி இட்டுச் செல்லட்டும்’ என்றும், மதநம்பிக்கை, சமூகப் பின்னணி வித்தியாசங்கள் கடந்து அமைதியாக வாழவும், முன்னேற்றத்துக்கு பங்களிக்கவும் இந்நாள் வழிகாட்டட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.