News October 8, 2025
மோடி முதல்வரான கதை (2/2)

1998-ல் சங்கர்சிங் வகேலா கட்சியில் இருந்து விலக, கேசுபாயை CM பதவி மீண்டும் தேடிவந்தது. 98-ல் PM வாஜ்பாய், மோடியை தேசிய அமைப்பு பொது செயலாளராக்கினார். 2001 உள்ளாட்சி தேர்தல் தோல்வி, நிலநடுக்கத்தை எதிர்கொள்வதில் சுணக்கம் கேசுபாய்க்கு எதிராக திரும்பின. தேர்தலுக்கு 1 வருடம் இருக்கும் போது, 2001 அக்.7-ல் குஜராத்தின் CM ஆன மோடி, 2014-ல் PM பொறுப்பை ஏற்கும் வரை, 11 ஆண்டுகள் பதவியில் தொடர்ந்தார்.
Similar News
News October 8, 2025
விஜய் மீது வன்மம் இல்லை: திருமாவளவன்

விஜய் மீது எந்த வன்மமும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கரூர் துயரத்தில் விஜய்யை சிறைப்படுத்த வேண்டும் என விசிக வலியுறுத்தவில்லை என்றும் ஆனால், அவர் தார்மீக பொறுப்பு ஏற்காததால் தான் விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்க கூடாது என்கிற படிப்பினையை விஜய் உள்பட எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பெற வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News October 8, 2025
உயர்கல்வித்துறையை சீரழித்த திமுக அரசு: அன்புமணி

உயர்கல்வித்துறையை திமுக அரசு தொடர்ந்து சீரழித்து வருவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 10 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நான்கரை ஆண்டுகளில் 35 புதிய கல்லூரிகள் உருவாக்கியிருந்தாலும், ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்காததால், அவற்றில் சேர மாணவர்கள் தயாராக இல்லை என்று அன்புமணி சாடியுள்ளார்.
News October 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 8, புரட்டாசி 22 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை