News September 3, 2025
10-வது மட்டுமே படித்தவர் ₹1 கோடி சேமித்த கதை

பெங்களூருவில் 10-வது மட்டுமே படித்த நபர் ஒருவர், 25 ஆண்டுகளில் ₹1 கோடி சேமித்து கவனத்தை ஈர்த்துள்ளார். ₹4,200 சம்பளத்தில் வேலையை தொடங்கிய அவர், வங்கிகளில் FD, RD மூலம் பணம் சேமித்துள்ளார். வேலைக்கு சேர்ந்த அடுத்த சில ஆண்டுகளில் கடின உழைப்பால் ₹63,000 வரை சம்பளம் உயர்ந்தாலும் அவர் வீடு, கார் என எதையும் வாங்கவில்லை. நமது இலக்குகளை அடைய பொறுமையும், ஒழுக்கமும் அவசியம் என அவர் கூறுகிறார்.
Similar News
News April 5, 2026
அதிமுகவில் பலர் அதிருப்தி.. செங்கோட்டையன் பரபரப்பு

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் பலர் கட்சி மாற தயாராகி வருவதாக செங்கோட்டையன் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். கோபியில் பேசிய அவர், அதிமுகவில் பணம் கட்டிய பலருக்கு சீட்டு தேர்தலில் சீட் தராமல் EPS நாமத்தை கொடுத்துவிட்டார் என்றார். மேலும், கோபிசெட்டிபாளையத்தில் தன்னை நடுத்தெருவில் நிறுத்துவேன் எனக் கூறிய மா.செ., AK செல்வராஜ் தற்போது சீட் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார் என சாடியுள்ளார்.
News April 5, 2026
இது இயேசுவின் வழிக்கு முரணானது: போப்

போரில் USA வெற்றிபெற மக்கள் பிரார்த்திக்க வேண்டும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பேசியிருந்தார். இந்நிலையில், ஈஸ்டர் திருநாளான வாடிகன் தேவாலயத்தில் பேசிய போப், இதனை கண்டித்துள்ளார். போரை மதரீதியாக இணைப்பது இயேசுவின் வழிக்கு முரணானது என அவர் கடிந்துகொண்டார். மேலும் போரை கைவிட்டு, அமைதி, சமாதானம், மதநல்லிணக்கத்துடன் உலகம் இயங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
News April 5, 2026
புதிய மாவட்டமாக உருவாகிறதா விருத்தாசலம்?

தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டமாக இருக்கும் கடலூரை பிரித்து, விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று 2021-ல் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக திமுக முன்னாள் MLA இள.புகழேந்தி-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 2026-ல் விருத்தாசலம் தனி மாவட்டமாக கண்டிப்பாக உருவாக்கப்படும் என கூறியுள்ளார்.


