News April 8, 2025
பாதாளத்துக்கு சென்று மீண்ட ஷேர் மார்கெட்

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று வரலாற்று சரிவை சந்தித்த நிலையில், இன்று சற்று மீட்சியடைந்திருக்கின்றன. டிரம்ப்பின் அதிரடி பொருளாதார அறிவிப்புகளால் நேற்று நிஃப்டி சுமார் 885 புள்ளிகள் சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்களின் காயத்திற்கு மருந்து போடும் விதமாக, இன்று நிஃப்டி 381 புள்ளிகள் உயர்ந்து, 22,543 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது.
Similar News
News April 17, 2025
காலையில் 30 நிமிடங்களுக்கு இப்படி செய்தால் ..!

வாக்கிங் 10,000 ஸ்டெப்ஸ்தான் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செய்யுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இது உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றின் அபாயத்தை குறைக்கும் எனவும் கூறுகின்றனர். ஆனால், நடக்கும்போது, கொஞ்சம் சீரான வேகத்தோடு நடக்க வேண்டும். இது உடலின் சுவாசம் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. SHARE IT.
News April 17, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க புதிய விதிகள் அறிமுகம்

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதால், <<16124391>>அட்சய திருதியை<<>>க்கு தங்கம் வாங்க, நகைக்கடைகள் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளன. அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வரும் போது, முன்பதிவு செய்திருந்த தினத்திலிருந்து அட்சய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு நகை வாங்கிக் கொள்ளலாம் என நகைக் கடைகள் அறிவித்துள்ளன. அதன்படி, பலரும் ஆர்வத்துடன் முன்பணம் செலுத்தி வருகின்றனர்.
News April 17, 2025
3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. சென்னை, விருதுநகர், மதுரை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் பரவலாக மழை பெய்துள்ளது. அதேநேரம் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்.