News August 5, 2024
கடும் வீழ்ச்சியை சந்தித்த பங்குச்சந்தை

வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 2,222 புள்ளிகளும், நிஃப்டி 662 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தது. இதனால், முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ₹18 லட்சம் கோடியை இழந்துள்ளனர். அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 20, 2026
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. ஏற்கெனவே, அரியலூர், திருவாரூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு முதலே சில இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழையா?
News March 20, 2026
CPI கட்சியால் CPM அதிருப்தியா?

காங்.,க்கு கூடுதல் தொகுதி ஒதுக்கிய திமுக, புதிதாக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு இரண்டு இலக்க சீட்டை கொடுக்க தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு காங்., தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததால், தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் வேண்டுமென விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனால், CPI கட்சி 5 சீட்களுக்கு ஒப்புக்கொண்டதால், CPM அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
News March 20, 2026
நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு பேசிய EPS கூறியுள்ளார். திமுகவும் ஓரிரு நாள்களில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகளுமே தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய 5 சவரன்(40 கிராம்) வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.


