News May 16, 2024
மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்

ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருவதால் GT – SRH இடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை சற்று குறைந்த பின் டாஸ் போடப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்படும். ஏற்கெனவே GT அணியின் கடைசிப் போட்டியும் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 2, 2025
தஞ்சை: இன்று ரயில் நிலையத்தின் 164ஆவது ஆண்டு!

தென்னிந்தியாவில் முதல் ரயில் சேவை 1856 ஆண்டு ஜூலை1ம் தேதி ராயபுரத்திலிருந்து வாலாஜாபேட்டைக்கு தொடங்கியது.தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. அந்த வரிசையில் நாகை தஞ்சாவூர் இடையே அகல ரயில் பாதை இந்தியாவின் கிரேட் தென்னிந்திய ரயில்வே என்ற பெயரில் 1861 டிசம்பர் 2ம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்டு, இன்றுடன் தஞ்சை ரயில் நிலையம் 164 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
News December 2, 2025
கரூர் துயர வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில்(SC) தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு(SIT) விசாரணை தொடர அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. SC உத்தரவின்பேரில் CBI அதிகாரிகள் ஒரு மாதமாக கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 2, 2025
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று இரவு சென்னை – பாண்டிச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


