News April 1, 2024

தோனியின் பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்

image

டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே வீரர் தோனி பவுண்டரி விளாசியபோது, ரசிகர்களின் கூச்சலால் மைதானமே அதிர்ந்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். இதில் ஒரு பவுண்டரியை அவர் விளாசியபோது, ரசிகர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டதால் மைதானமே அதிர்ந்தது. அப்போது மைதானத்தில் சத்த அளவு, 128 டெசிபலாக பதிவாகியுள்ளது.

Similar News

News December 27, 2025

திருவள்ளூர்: மாட்டைக் காப்பாற்ற முயன்றவர் ஏரியில் மூழ்கி பலி!

image

கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி(45). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் குடிநீர் உற்பத்தி தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில், உற்பத்திச் சாலைக்கு சொந்தமான மாடு ஒன்று ஏரியில் சிக்கித் தவித்தது. அப்போது மாட்டைக் காப்பாற்ற சென்ற முனுசாமி நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். அவரது உடலை நேற்று(டிச.26) இரவு ஏரியில் இருந்து மீட்டனர்.

News December 27, 2025

3 குழந்தைகளை பெறுவது சிறந்தது: சந்திரபாபு நாயுடு

image

உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும் என ஆந்திர CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் முக்கியம் என்று கூறிய அவர், RSS தலைவர் மோகன் பகவத் கூறுவதுபோல ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால் 2047-க்கு பிறகும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறினார்.

News December 27, 2025

சர்வதேச சந்தையில் தங்கம் இன்று ₹4,906 உயர்ந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று(டிச.27) ஒரே நாளில் இந்திய மதிப்பில் ₹4,906 உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்திய சந்தையில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம், தற்போதைய நிலவரப்படி சவரன் ₹1,03,120-க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) தங்கம் $54.63(₹4,906) உயர்ந்து $4,534-க்கு விற்பனையாகிறது. கடந்த 30 நாள்களில் மட்டும் $323(₹28,821) உயர்ந்துள்ளது.

error: Content is protected !!