News October 30, 2024

‘அமரன்’ படத்தின் ‘உயிரே’ பாடல் நாளை வெளியீடு

image

‘அமரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘உயிரே’ பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று ‘அமரன்’ வெளியாக உள்ளது.

Similar News

News July 11, 2025

BREAKING: பள்ளி முதல்வர் அதிரடி கைது!

image

மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தானேவில் உள்ள RS தமானி பள்ளியில் நடந்துள்ளது. கழிவறையில் ரத்தக்கறை இருந்ததால் அதனை செய்தது யார் என்பதை அறிய இந்த கொடூரத்தை அரங்கேற்றிய பள்ளி முதல்வர் மாதுரி கெய்க்வாட், பெண் ஊழியர் நந்தா இருவரும் நடத்தியது தெரியவந்துள்ளது. இவர்கள் பெண்களா? என நெட்டிசன்கள் சாடுகின்றனர்.

News July 11, 2025

காலையில் இத பண்ணுங்க…

image

நல்ல தூக்கம் மட்டுமின்றி, காலையில் செய்யும் ஒரு சில விஷயங்கள், அன்றைய நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்
*வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடல் கழிவுகள் வெளியேற உதவியாக இருக்கும் *சுறுசுறுப்பாக இருக்க, உடற்பயிற்சி செய்யுங்க *தியானம், மன அமைதிக்கு உதவும் *எந்த காரணத்திற்கும் டிபனை உட்கொள்ளாமல் இருக்க வேண்டாம். சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

News July 11, 2025

பெங்களூருவில் தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ்

image

பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் 7000 பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாம். போதிய ஊட்டசத்து கிடைக்காததால் தான் நாய்கள் இவ்வாறு தாக்குவதாகவும், ஆகையால் அவற்றுக்கு சிக்கன் ரைஸ் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ₹2.88 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இத்திட்டம் மூலம் தினமும் 5000 நாய்கள் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!