News October 23, 2024
பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவின் பெயர்

புதிய பாம்பு இனத்திற்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொரோனா சமயத்தில் இமயமலையில் விரேந்தர் பரத்வாஜ் என்பவர், புதிய வகை பாம்பு ஒன்றை கண்டுபிடித்தார். இந்த பாம்பு வகைக்கு லியோனார்டோ டிகாப்ரியோ பெயரை குறிக்கும் விதமாக ‘ஆங்குவிகுலஸ் டிகாப்ரியோய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பாக டிகாப்ரியோ விழிப்புணர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 21, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. தங்கம் 1 அவுன்ஸ்(28g) $16.32 சரிந்து $4,065-க்கும், வெள்ளி(1 அவுன்ஸ்) $0.83 குறைந்து $50.74-க்கும் விற்பனையாகிறது. நேற்று(நவ.20) சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடித்ததால் நம்மூர் சந்தையில் சவரனுக்கு ₹800 குறைந்தது. இன்றும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 21, 2025
ரஜினி – கமல் காம்போவில் இளையராஜா இணைவாரா?

கமல் தயாரிக்க ரஜினி நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சுந்தர் சி வெளியேறியதால், மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்கும் பணியில் ரஜினி தீவிரமாக உள்ளனர். இதனிடையே இந்த படத்தில் இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதா என கமலிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இசையமைப்பாளர், இயக்குநர் எல்லாவற்றையும் ரஜினியே தேர்வு செய்வார் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
News November 21, 2025
10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்பதால் இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. முக்கியமாக தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


