News March 23, 2024

காஷ்மீரின் நிலை நாளை நமக்கும் வரலாம்

image

பாஜகவிற்கு வாக்களித்தால், காஷ்மீரின் நிலை நாளை நமக்கும் வரலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ‘இந்தியா கூட்டணி அமைய நான் காரணமாக இருந்தேன் என்பதால் என் மீது பிரதமருக்கு கோபம். பாஜகவின் பாணி ஒரு சர்வாதிகாரம். மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நிதி கொடுக்காத பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்’ என்றார்.

Similar News

News February 13, 2026

காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்தது

image

வரத்து அதிகரிப்பால் இன்று காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து இல்லத்தரசிகளையும், ஹோட்டல் உரிமையாளர்களையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று தக்காளி 1 கிலோ ₹25, சின்ன வெங்காயம் ₹40, உருளைக் கிழங்கு ₹45 வரை விற்பனையானது. இந்நிலையில், இன்று தக்காளி ₹15 (kg), சின்ன வெங்காயம் & உருளை ஆகியவை கிலோ ₹30 என விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் ஊரில் எவ்வளவு என்று கமெண்ட் பண்ணுங்க.

News February 13, 2026

ஜெ., பிறந்தநாளில் EPS இதை அறிவிக்கிறார்

image

Ex. CM ஜெயலலிதா பிறந்தநாளான பிப்.24-ல் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட EPS திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த(2021) தேர்தலில் போட்டியிட்ட 179 தொகுதிகளில் 66-ல் வென்று 33.29% ஓட்டுகளை அதிமுக பெற்றிருந்தது. இந்நிலையில் இத்தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என EPS நம்பிக்கையுடன் இருப்பதால் மீண்டும் 179 தொகுதிகளை அதிமுகவுக்கு தக்கவைக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்கின்றனர்.

News February 13, 2026

வங்கதேசத்தின் புதிய PM இவர்தான்..

image

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் (299 தொகுதிகள்) தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி 151 இடங்களை கைப்பற்றி வென்றுள்ளது. EC இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு 3-4 நாள்களில் முகமது யூனுஸின் தலைமையிலான ராணுவ ஆட்சி முடிவுக்கு வரும். புதிய PM-ஆக தாரிக் ரஹ்மான் பதவியேற்பார். அதேநேரம் மாணவர் புரட்சியில் உருவான என்சிபி கட்சி வெறும் 6 இடங்களை மட்டும் கைப்பற்றி படுதோல்வி அடைந்துள்ளது.

error: Content is protected !!