News August 25, 2024

அந்த நிகழ்ச்சியால் தனக்கு ஆறாத வடு: K.L.ராகுல்

image

காஃபி வித் கரண் நிகழ்ச்சியால் வேதனை அடைந்ததாக K.L.ராகுல் தெரிவித்துள்ளார். அப்போது நான் பேசியது தன்னுள் வடுவை ஏற்படுத்தியதாக கூறிய அவர், அதற்காக இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து சஸ்பெண்ட் ஆனதாகவும் நினைவுகூர்ந்தார். மேலும், பள்ளிக் கூடத்தில் கூட தான் சஸ்பெண்ட் ஆகவில்லை எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பெண்கள் பற்றி ராகுல், ஹர்திக் இழிவாக பேசியதாக புகார் எழுந்தது.

Similar News

News March 7, 2026

நெஞ்சு சளி விரட்டும் கசாயம்!

image

➤தேவை: கற்பூரவல்லி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், மிளகு சீரகம், துளசி, இஞ்சி, மஞ்சள் தூள் ➤செய்முறை: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் (மஞ்சளை தவிர்த்து) நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு, மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். இதனை இரவில் குடித்து வர நெஞ்சு சளி நீங்கும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அனைவருக்கும் இதை பகிருங்கள்.

News March 7, 2026

அதிமுக கூட்டணியில் இணைந்தார்

image

திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாளாக புதிய தமிழகம், தேசிய திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவினர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், தேசிய திராவிட கழக பொதுச்செயலாளர் பூட்டுதாக்கு நித்தியா, 2026 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளார். இன்று அல்லது நாளை EPS-ஐ நேரில் சந்தித்து, ஆதரவு கடிதத்தை நித்தியா வழங்கவுள்ளார்.

News March 7, 2026

காங்கிரஸ் வேட்பாளர்கள்.. CM ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்!

image

நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதியாகியுள்ளது. இந்நிலையில், 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது என்பதால் தொகுதியில் செல்வாக்கு, செலவு செய்யத் தயாராக இருப்பவரை களமிறக்க வேண்டும் என காங்., மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் வலியுறுத்தியதாக தகவல் கசிந்துள்ளது.

error: Content is protected !!