News November 24, 2024

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு

image

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ‘ப.பாண்டி’, ‘ராயன்’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கும் இப்படத்தில், அவரது சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது.

Similar News

News December 4, 2025

குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (டிச.4) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE பண்ணுங்க.

News December 4, 2025

Business 360°: சேவைத்துறை வளர்ச்சி அதிகரிப்பு

image

*கடந்த நவம்பரில், நாட்டின் சேவைத்துறை 59.8 புள்ளிகளை பெற்று வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் *பூஷான் பவர்ஸ் நிறுவனத்தில் ஜப்பானின் ஜே.எப்.இ ஸ்டீல்ஸ் நிறுவனம் ₹15,750 கோடி முதலீடு *இந்தியாவில் 5 லட்சம் கார்களை விற்றுள்ளதாக ஸ்கோடா அறிவிப்பு *ரிலையன்ஸின் எண்ணெய் நிறுவனமான நயாரா, கடந்த நவம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்கியுள்ளது.

News December 4, 2025

சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தார்

image

2026 தேர்தல் வரவிருப்பதால், திமுகவும், அதிமுகவும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி – எஸ்.பி.வேலுமணி இடையே மாற்றுக்கட்சியினரை இணைப்பதற்கான போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

error: Content is protected !!