News March 16, 2024
தமிழக முதல்வருக்கு மனு அனுப்பிய பொதுச்செயலாளர்

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (மார்ச் 16) மனு அனுப்பியுள்ளார்.அதில் 2016ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு கிடைக்காமல் போக்குவரத்து ஓய்வூதியர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆகவே உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
Similar News
News August 8, 2025
11ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், “நடப்பு ஆண்டில் 2ஆம் சுற்று குடற்புழு நீக்க முகாம் 11ஆம் தேதி மற்றும் விடுபட்டவர்களுக்கு 18ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு தடுப்பு மாத்திரை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 7) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விவரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 8, 2025
தமிழ் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருது பெற வாய்ப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2025ம் ஆண்டிற்கான “தமிழ் செம்மல்” விருதுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithuraiin..gov.in வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மண்டல தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் 28ம் தேதிக்குள் வழங்க வேண்டும். விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.