News April 17, 2025
கொளுத்தும் வெயில்.. அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?

உடல் சூட்டை தணிப்பது அம்மை நோயை வராமல் தடுக்கும் *வாரம் 3 நாள்கள் தலைக்குக் குளிக்கலாம் *வெறும் தண்ணீர் குடிக்காமல், எலுமிச்சை சாறு, நன்னாரி போன்றவற்றைச் சேர்க்கலாம் *தாழம்பூவுக்கு அம்மையைத் தடுக்கும் குணம் உண்டு. டாக்டர்களின் ஆலோசனையோடு தாழம்பூ மணப்பாகு எடுத்துக்கொள்ளலாம். குளிக்கும் நீரில் வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து குளிக்கலாம் *இளநீர், கரும்பு ஜூஸ், பனஞ்சாறு குடிக்கலாம். SHARE IT.
Similar News
News January 2, 2026
மார்கழி வெள்ளிக்கு மங்களகரமான கோலங்கள்!

குனிந்து எழுந்து கோலம் போடுவது முதுகெலும்பு, இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியை வலுப்படுத்தும் உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. அதேபோல வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும், செல்வத்தையும் ஈர்ப்பதாக (மகாலட்சுமி கடாட்சம்) முன்னோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சில எளிய மார்கழி கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை மேலே SWIPE செய்து பார்த்து வீட்டில் முயற்சிக்கவும்.
News January 2, 2026
ஓய்வை அறிவித்தார் உஸ்மான் கவாஜா!

ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா(39) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். வரும் 4-ம் தேதி தொடங்கும் 5-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியுடன் அவர் ஓய்வு பெறவுள்ளார். ஆஸி., அணிக்காக 87 டெஸ்ட், 40 ODI, 9 T20I போட்டிகளில் விளையாடி 8,001 ரன்களை குவித்துள்ள கவாஜா, 2023-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023-ல் இந்தியாவில் நடந்த BGT போட்டியில், கவாஜா 180 ரன்களை விளாசி இருந்தார்.
News January 2, 2026
சற்றுமுன்: மீண்டும் இணைகிறாரா ஓபிஎஸ்?

ஜன.4-ல் தமிழகம் வரும் அமித்ஷாவை OPS சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித் ஷாவின் வருகைக்கு முன்பே, OPS-ஐ அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து சுமுகமாக பேசி முடிக்க நயினாரிடம் பியூஷ் கோயல் கூறியிருக்கிறாராம். இதுதொடர்பாக, EPS உடனும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான், நேற்று OPS, TTV மீண்டும் NDA கூட்டணியில் இணைய வேண்டும் என <<18734043>>நயினார் <<>>அழைப்பு விடுத்திருக்கிறார்.


