News April 29, 2025

கொதிக்கும் வெயில்.. வெளியே வராதீங்க

image

வேலூர், ஈரோடு, சேலம், திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களில் வெயில் இன்று சதம் அடித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளையும் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. எனவே, காலை 11 மணி – பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

விஜய்யின் அடுத்தக்கட்ட மூவ்

image

தவெக மாநில நிர்வாகிகள் & மாவட்ட செயலாளர்களுடன் விஜய் நாளை அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், அடுத்தக்கட்ட சுற்றுப்பயணங்கள், தேர்தல் பிரசாரம், SIR, பூத் கமிட்டி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் விஜய்யின் அடுத்த சுற்றுப்பயணங்கள் எங்கே என்பது குறித்த தகவல் வெளியாகலாம்.

News December 10, 2025

திமுகவின் புதிய பரப்புரை இன்று தொடக்கம்..

image

2026 தேர்தலுக்கான பரப்புரையை பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பரப்புரையை தமிழகம் முழுவதும் திமுக இன்று தொடங்குகிறது. தேனாம்பேட்டையில் நடைபெறும் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அதேபோல், அமைச்சர்கள் அந்தந்த பகுதிகளில் பங்கேற்கின்றனர்.

News December 10, 2025

12th பாஸ் போதும், 2757 காலியிடங்கள்: முந்துங்க

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 Apprentices காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளம்: ₹25,000 – ₹30,000. கல்வித் தகுதி: 12th, Diploma, Degree. வயது வரம்பு: 18 – 24 வரை. தேர்வு செய்யும் முறை: Merit List, Certificate Verification. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18-ம் தேதி. உடனே விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. வேலை தேடுவோருக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!