News April 12, 2025
சுட்டெரிக்கும் வெயிலும், கோடை மழையும்!

சென்னை, கடலூர், ஈரோடு, மதுரை, நாகை, திருச்சி, திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நேற்று இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. கரூர், ஈரோடு, வேலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் 102 டிகிரியும், தஞ்சை, திருத்தணி, சேலத்தில் 100 டிகிரியும் பதிவாகியுள்ளது. அதேநேரம், திருப்பத்தூர், கொடைக்கானல், அரியலூர் உள்ளிட பகுதிகளில் பரவலாக கோடை மழையும் பெய்துள்ளது.
Similar News
News November 16, 2025
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. டிசம்பர் 27-ல் மண்டல பூஜையும், ஜன.14-ல் மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. எனவே, மாலை அணிந்து விரதம் இருப்போர், சுவாமியை தரிசிக்க திட்டமிட்டுக் கொள்ளலாம். 18-ம் படிக்கு மேல் சுவாமி சன்னதி வரை செல்போன், கேமரா ஆகியவை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
News November 16, 2025
தனியார் பஸ் கட்டணம் உயரப் போகிறது

டீசல் விலை உயர்வு, அரசின் இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட காரணங்களால், கட்டணத்தை மாற்றி அமைக்க, தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணையின் போது, கட்டண உயர்வு தொடர்பாக 950 பரிந்துரைகள் வந்துள்ளதாகவும், இது குறித்து டிச.30-க்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. இதையடுத்து, 2026 ஜன.6-ம் தேதி இறுதி முடிவை தாக்கல் செய்ய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
News November 16, 2025
அயோத்தி ராமர் கோயிலுக்கு CM ஸ்டாலின் போவாரா?

அயோத்தி ராமர் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, 150 அடி உயர துவஜஸ்தம்பம் நிறுவப்பட உள்ளது. வரும் 25-ம் தேதி நடைபெறும் இந்த விழாவில் PM மோடி பங்கேற்கிறார். அனைத்து மாநில CM-களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட உள்ளது. CM ஸ்டாலின் போவாரா (அ) கடவுள் பக்தி கொண்ட தனது மனைவியை அனுப்பி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு CM செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


