News May 5, 2024
கத்தரி வெயிலின் தாக்கம் தொடங்கியது

வெயிலின் உச்சமாக கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ தமிழ்நாட்டில் நேற்று தொடங்கியது. இதன் தாக்கமாக, நேற்று 15 இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அடுத்த 25 நாட்களுக்கு கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். நேற்றைய தினம் கரூர், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பத்தூர், திருத்தணி, தருமபுரி, மதுரை ஆகிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
Similar News
News August 31, 2025
மீண்டும் இந்தியாவில் ‘Tiktok’.. வேலைகள் மும்முரம்?

தடை செய்யப்பட்டிருந்த Tiktok மீண்டும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை மத்திய IT அமைச்சகம்(MeitY) முற்றிலுமாக மறுத்தது. இந்த நிலையில்தான், ‘Tiktok India’ நிறுவனம் குருகிராமில் உள்ள அலுவலகத்தில் முக்கிய பணியிடங்களில் ஆட்களை தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இது மேலும் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. இந்தியாவில் மீண்டும் Tiktok பயன்பாட்டுக்கு வரவேண்டுமா?
News August 31, 2025
இபிஎஸ் மகனுடன் சசிகலா சீக்ரெட் மீட்டிங்?

சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, அதிமுக ஒருங்கிணைப்புக்கான குரல் வலுத்துக்கொண்டே வருகிறது. இதில் தீவிரமாக இறங்கியிருக்கும் சசிகலா, அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசிவந்தாராம். ஆனால் EPS எதற்கும் அசைந்துகொடுக்காததால், தற்போது அவரது மகன் மிதுனிடமே பேச்சுவார்த்தையை அவர் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு எதிர்பார்க்கலாமா? உங்கள் கருத்து?
News August 31, 2025
தினமும் ₹50 சேமித்தால், ₹1 லட்சம் தரும் திட்டம்

பணம் சேமிப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டம் சிறந்த வழியாக இருக்கிறது. பெரிய தொகையை சேமிக்க முடியாதவர்கள் இத்திட்டத்தில் தினமும் வெறும் ₹50 சேமித்து, 6.7% வட்டியோடு, 5 ஆண்டுகளில் ₹1 லட்சம் வரை பெறலாம். உங்களால் எவ்வளவு சேமிக்க முடிகிறதோ அதற்கு ஏற்றார் போல் தொகை கிடைக்கும். Post Office-க்கு சென்று உங்களுக்காக கணக்கை தொடங்குங்கள். SHARE.