News September 7, 2024

அப்பா வரும் காட்சிகள் புல்லரிக்கிறது..!

image

‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் வரும் காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், இக்காட்சிகள் தனக்கு அனுப்பப்படுவதாக கூறிய அவரது மகன் விஜய பிரபாகரன், அதை பார்க்கும் போது புல்லரிப்பதாக தெரிவித்துள்ளார். படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து இருப்பதாகவும், ஆனால் நேரம் கிடைக்காததால் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாளைக்குள் படத்தை பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 22, 2025

ஆகஸ்ட் 22: வரலாற்றில் இன்று

image

*1639 – நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) பிரிட்டிஷ் அமைத்தது.
*1894 – SA-வில் இந்திய வணிகர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடால் இந்தியக் காங்கிரஸ் என்ற அமைப்பை மகாத்மா காந்தி துவக்கினார்.
*1955 – நடிகர் சிரஞ்சீவியின் பிறந்ததினம்.
*1958 – நடிகர் லிவிங்ஸ்டன் பிறந்ததினம்.
*1932 – தொலைக்காட்சி சேவை துவங்க BBC சோதித்தது.

News August 22, 2025

இணையத்தில் வைரலாகும் ஜான்வி கபூர் போட்டோஸ்

image

80-களில் தமிழில் ஜாம்பவான் நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியிலும், தெலுங்கிலும் கவனிக்கதக்க நடிகையாக வளர்ந்து வருகிறார். விரைவில் அவர் தமிழ் சினிமாவிலும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் அண்மையில் எடுத்த போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை மேலே கொடுத்துள்ளோம் Swipe செய்து பார்க்கவும்.

News August 22, 2025

டெல்லியில் தெருநாய்கள் நிலை? SC-ல் இன்று முடிவு

image

டெல்லியில் தெருநாய்களை காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என SC அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் 3 நீதிபகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆக.,14-ம் தேதி 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

error: Content is protected !!