News August 13, 2024

தமிழக காங்கிரஸில் தனி அணி உதயம்?

image

தமிழக காங்கிரஸில் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆதரவாளர்களுடன் புதிய அணியை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ராஜிவ் பிறந்தநாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லி வரை ஜோதி யாத்திரை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள் தலைமையில் யாத்திரை தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவுக்கு கட்சியில் மற்ற தலைவர்களுக்கு அழைப்பு விடுக்காததால், தமிழக காங்கிரஸில் புது அணி உருவானதாகக் கூறப்படுகிறது.

Similar News

News March 7, 2026

நேபாளத்தில் புதிய ஆட்சி.. இந்தியாவுக்கு நன்மையா?

image

பாலேன் ஷா தலைமையில் நேபாளத்தில் ஆட்சி அமையவுள்ளது. இச்சூழலில், இந்தியாவுடன் நேபாளம் சுமூகமான உறவை கொண்டிருக்குமா என்பது விவாதமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை ஷா பேசியிருந்தாலும், அவர் சீனாவுடன் நெருக்கமான உறவில் இல்லாதது இந்தியாவுக்கு நன்மை என பார்க்கப்படுகிறது. அத்துடன், தேர்தல் அறிக்கையில் வெளிநாட்டு உறவுகளில் சுமுகமான போக்கை விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.

News March 7, 2026

OPS எண்ட்ரியால் திமுகவில் சலசலப்பா?

image

OPS வருகையால் திமுகவின் தென்மாவட்ட நிர்வாகிகள் பலர் முகம் வாடுகின்றனராம். காரணம், அதிமுகவில் இருந்து வருகிறவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தலைமை, ஏற்கெனவே இருக்கும் நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு அவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குகிறது என்கின்றனராம். அத்துடன் ஜெ.,வின் ஆதரவாளரான OPS தற்போது திமுக புகழ் பாடத்தொடங்கியிருப்பதால் அவருக்கு இருந்த சமூக ஆதரவும் குறைந்திருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

News March 7, 2026

நகைக்கடன் தள்ளுபடி .. வெளியான மகிழ்ச்சி செய்தி

image

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக பெண்களை கவரும் வகையில், மகளிர் தினத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பெண்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை விஜய் வெளியிடுகிறார். நாளை திமுகவும், அதிமுகவும் பெண்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

error: Content is protected !!