News March 18, 2025
நாக்பூரில் வெடித்த கலவரம்: காரணம் என்ன?

நாக்பூரில் கலவரம் மூண்டதற்கு ‘சாவா’ திரைப்படமே காரணமாகி இருக்கிறது. சட்டப்பேரவையில் படத்தை குறிப்பிட்டு, அவுரங்கசீப்பை புகழ்ந்து சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி கோஷமிட்டதால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது புனித நூலை அவர்கள் எரித்ததாக வதந்தி பரவியதால், வன்முறை மூண்டு கலவரமாக வெடித்தது.
Similar News
News March 18, 2025
ரஜினியின் ‘கூலி’ ஷூட்டிங் நிறைவு

‘கூலி’ படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து வந்தார். அவருடன் நாகர்ஜுனா, சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 10 அல்லது தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
News March 18, 2025
‘DD 5’ பேன்ஸி நம்பரின் விலை ₹82 கோடி!

தங்களது சொகுசு காருக்கு பேன்ஸி நம்பர் வாங்குவது பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், துபாயைச் சேர்ந்தவர்கள் இதில் ஒரு படி மேல். முகமது பிங்கட்டி என்ற தொழிலதிபர், தனது குழுவை, கார் நம்பருக்கான ஏலம் எடுப்பதற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு ‘DD 5’ என்ற பேன்ஸி நம்பரை ₹82 கோடிக்கு அந்த குழு ஏலம் எடுத்துள்ளது. கார் நம்பருக்காக ஏலத்தில் இவ்வளவு தொகை செலவு செய்வது இதுவே முதல்முறை.
News March 18, 2025
75% வாக்குறுதிகள் பெண்டிங்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர்கள் 2024இல் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் கேள்விக்கு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்தார். அப்போது 2024இல் அமைச்சர்கள் 160 வாக்குறுதிகள் அளித்ததாகவும், அதில் 39 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.