News October 4, 2025

கிட்னியை விற்று ஐபோன் வாங்கியதால் வந்த வினை

image

ஐபோன் மீதான மோகத்தால் சீனாவில் வாலிபர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடக்கிறார். வாங் சாங்குன் என்பவர் 2011-ல் ஐபோன் 4 மற்றும் ஐபேட் 2 வாங்குவதற்காக தனது வலது கிட்னியை 20,000 Yuan (₹2.5 லட்சம்) விற்றுள்ளார். சில மாதங்களில் அவரது மற்றொரு கிட்னியும் பாதிப்படைந்த நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக டயாலிசிஸ் மிஷின் உதவியோடு உயிர் வாழ்ந்து வருகிறார்.

Similar News

News October 4, 2025

டாப் 50-யில் சென்னை உணவகங்கள்

image

2025-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த 50 உணவகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் – 13, பெங்களூருவில் – 9, டெல்லியில் – 9, கோவாவில் – 8, சென்னையில் – 5, கொல்கத்தாவில் – 3 உணவகங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சென்னையில் மிகவும் பிரபலமான ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள அவர்தனா உணவகம் 8-வது இடத்தை பிடித்துள்ளது. உங்களுக்கு பிடித்த உணவகம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 4, 2025

சதத்தை ராணுவத்துக்கு சமர்பித்த துருவ் ஜுரெல்

image

வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் துருவ் ஜுரெல் சதம் (125 ரன்கள்) விளாசி அசத்தினார். தனது அரைசத வெற்றியை தனது தந்தைக்கும், சதம் அடித்த கொண்டாட்டத்தை இந்திய ராணுவத்துக்கும் சமர்பிப்பதாக நெகிழ்வுடன் கூறியுள்ளார். இந்த வார்த்தையை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, பாக்.,க்கு எதிராக பெற்ற ஆசிய கோப்பை வெற்றியை ராணுவத்துக்கு சமர்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.

News October 4, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 4, புரட்டாசி 18 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

error: Content is protected !!