News December 10, 2024
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

ராஜஸ்தானில் 150 அடி நீள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உள்ளே விழுந்து சிக்கிக் கொண்டான். இதுகுறித்த தகவலின்பேரில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், உள்ளூர் நிர்வாகத்தினரும் விரைந்து சென்று அவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுவனை காப்பாற்ற உள்ளே கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
Similar News
News August 26, 2025
பாஜகவுக்கு புதிய தலைவர்.. ரேஸில் முந்தியது யார்?

BJP தேசிய தலைவர் தேர்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2020 முதல் தலைவராக உள்ள JP நட்டாவின் பதவிக்காலம் நிறைவடைந்தபோதிலும், புதிய தலைவர் தேர்வு இழுபறியால் அவரே நீடிக்கிறார். இதனிடையே, BJP புதிய தலைவர் பொறுப்புக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வரவுள்ளதாக கூறப்படுகிறது. அவரை RSS டிக் அடித்துள்ளதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடே டெல்லியில் மோகன் பகவத்தை 45 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளாராம்.
News August 26, 2025
GST 2.0: இந்த பொருள்களில் விலை குறைகிறது!

அடுத்த மாதம் கூட உள்ள GST கவுன்சில் கூட்டத்தில், சிமெண்ட் மீதான வரியை 28%-ல் இருந்து 18%- ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீடு கட்டும் செலவு குறையும். அதேபோல், நடுத்தர, உயர்தர சலூன்களுக்கான 18% வரியை 5% ஆகவும், உணவு பொருட்கள், ஆடைகளை 5% வரம்பிற்குள் கொண்டு வரும் திட்டங்களும் உள்ளன. இதனால் நடுத்தர மக்களின் அன்றாட செலவுகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 26, 2025
திமுக Ex MLA காலமானார்.. CM ஸ்டாலின் இரங்கல்

திமுக Ex MLA கலிலூர் ரஹ்மான் மறைவுக்கு, CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 2006-ம் ஆண்டு தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றதோடு, சிறப்பான பணியால் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என புகழாரம் சூட்டியுள்ளார். கலிலூர் ரஹ்மான் மறைவால் தவிக்கும் உறவினர்கள், கட்சியினருக்கு தனது ஆறுதல்கள் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.