News October 2, 2025
குத்தகைக்கு விடப்பட்ட ரசிகர் மன்றமே தவெக: கி.வீரமணி

கரூர் துயருக்கு விஜய் தனது தொண்டர்களை சரியாக கையாளாமல் இருப்பதும் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில், விஜய் அரசியல் கட்சி நடத்தவில்லை, இன்னும் ரசிகர் மன்றத்தையே நடத்துகிறார் என்று கி.வீரமணி விமர்சித்துள்ளார். அத்துடன், தமிழகத்தில் பாஜக போன்ற எதிர்கட்சிகளுக்கு திமுகவை எதிர்க்க குத்தகைக்கு விடப்பட்ட ரசிகர் மன்றம் தான் தவெக என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
Similar News
News October 2, 2025
கிளாமர் டான்ஸில் சம்பளத்தை அள்ளும் தமன்னா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, சமீப காலமாக ஒரேயொரு பாடலில் கிளாமர் டான்ஸ் செய்துவிட்டு ரசிகர்களை கட்டி போட்டு வருகிறார். ‘காவாலா’ முதல் ‘Ghafoor’ வரை அவரது கவர்ச்சி நடனத்திற்கு பஞ்சமில்லை. இந்நிலையில், ஜெயிலர் பட பாடலுக்காக ₹1 கோடி சம்பளம் வாங்கிய தமன்னா, Ghafoor பாடலுக்காக ₹6 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இது ஒரு படத்தில் கதாநாயகியின் சம்பளத்தை விட கூடுதலாம்.
News October 2, 2025
கரூர் துயரம்: கைது செய்ய விரைந்தது போலீஸ்

கரூர் துயரச் சம்பவ வழக்கில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், இதுவரை கைது செய்ய முடியவில்லை. நிர்மல்குமார் உதவியாளரிடம் போலீஸ் துருவி, துருவி விசாரணை நடத்தியது. இருவரின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இன்றுக்குள் இருவரையும் கைது செய்ய போலீஸ் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 2, 2025
₹30,000 சம்பளம்: 610 பணியிடங்கள் அறிவிப்பு

பெங்களூரு BHEL நிறுவனத்தில் காலியாகவுள்ள 610 பொறியியல் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E, B.Tech, B.Sc. வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம்: 3 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் ₹30,000 – ₹40,000. இதுதவிர ₹12,000 மருத்துவம் உள்பட இதர செலவுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.7. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <