News October 14, 2025
கேஸ் சிலிண்டர்.. வெளியானது மகிழ்ச்சியான அறிவிப்பு

LPG கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் தவிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில், LPG கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை 2026 மார்ச் வரை எண்ணெய் நிறுவனங்கள் நீட்டித்துள்ளன. இதனையடுத்து ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், இனி தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.
Similar News
News October 14, 2025
விழுப்புரம்: ரூ.35,400 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு!

விழுப்புரம் மக்களே மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 2,861 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 14, 2025
மனித வரலாற்றில் மறக்க முடியாத பெயராகும் ஆலிசா!

ஆலிசா கார்சன்(24), மனித வரலாற்றில் மறக்க முடியாத பெயராக மாறவுள்ளது. ஆம், 2033-ல் கிளம்பி, மார்ஸில் கால்வைக்கப்போகும் முதல் மனிதர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். ஆனால் இது ‘One way trip’ தான், திரும்ப வர முடியாது. மார்ஸின் புவியீர்ப்பு & மனிதனின் டெக்னாலஜி வரம்பால், திரும்ப வருவது சாத்தியமில்லை எனப்படுகிறது. இதை அறிந்தும் தனது சிறுவயது கனவுக்காக NASA-வில் அலிஷா, தீவிர பயிற்சியில் உள்ளார்.
News October 14, 2025
பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம் முடிந்தது❤️❤️

சீரியல் நடிகர் தர்ஷனுக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது. அரண்மனை கிளி, காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் தர்ஷன். தற்போது, கன்னட படங்களிலும் கதாநாயகனாக நடித்து வரும் இவர், காசின் தேவ்வயா என்பவரை கரம்பிடித்துள்ளார். இவர்களது திருமண போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.