News July 11, 2024

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் ஆகஸ்ட் 2இல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் கடைசி சில படங்கள் வரவேற்பை பெறாத நிலையில், ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 21, 2025

அனில் அம்பானியின் ₹1,400 கோடி சொத்துக்கள் முடக்கம்

image

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அனில் அம்பானி & அவர் தொடர்புடைய நிறுவனங்கள் மீது ED விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று அனில் அம்பானிக்கு தொடர்புடைய ₹1,400 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை ED முடக்கியுள்ளது. இதுவரை ₹9,000 கோடி அளவிலான சொத்துகளை ED முடக்கியுள்ளது. அதேநேரம், இதுவரை 2 முறை சம்மன் அனுப்பப்பட்டும், அனில் ED அலுவலகத்தில் ஆஜராகவில்லை.

News November 21, 2025

ராசி பலன்கள் (21.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க

News November 21, 2025

சோழர் சிலையை மோடி தர மறுத்தார்: உதயநிதி

image

சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்த PM மோடி, குஜராத் CM ஆக இருந்தபோது, அங்குள்ள மியூசியத்தில் இருந்த ராஜ ராஜ சோழன், அவரது மனைவியின் சிலையை கேட்ட போது தர மறுத்ததாக உதயநிதி கூறியுள்ளார். தமிழ் படிக்க ஆர்வமுள்ள PM, தமிழ் படிக்கும் குழந்தைகளிடம் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது நியாயமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்பு, தமிழை சிறுவயதிலேயே கற்றிருக்கலாம் என மோடி உருக்கமாக கூறியிருந்தார்.

error: Content is protected !!