News March 31, 2025
இதுக்கு காரணமும் 90s கிட்ஸ் தான்!

ஜப்பான் கார்ட்டூன் வடிவமான Ghibli ட்ரெண்டால் உலகமே திக்குமுக்காடி வருகிறது. 1985ல் தொடங்கப்பட்ட Studio Ghibliயின் கார்ட்டூன்கள் இன்று ட்ரெண்டடிக்க, 90ஸ் கிட்ஸும் ஒரு காரணமே. ஆம், இந்த கார்ட்டூன்களுக்கு 90களிலும், 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும், 90ஸ் கிட்ஸ் ஏகோபித்த வரவேற்பை அளித்தனர். அதன் காரணமாக, புதுசா Gen Zக்கு ஏதாவது ட்ரெண்டு கொடுக்க நினைத்த AIயும், Ghibliயை கையில் எடுக்க வைத்துள்ளது.
Similar News
News January 19, 2026
கழிவறையில் பெண் போலீஸை வீடியோ எடுத்த SI சிக்கினார்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் காவலர்களின் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த SI கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நேற்று முன்தினம் CM ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக சென்ற பெண் காவலர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட பரமக்குடி SI முத்துப்பாண்டி, தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காக்க வேண்டிய போலீஸே இப்படியா?
News January 19, 2026
எதிர்ப்பையும் மீறி CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

திருப்போரூரில் ₹342.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மாமல்லன் நீர்தேக்கத்திற்கு CM அடிக்கல் நாட்டினார். சுமார் 4,376 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ளநீரை சேமிக்கும் வகையில் இது அமைய உள்ளது. இந்த நீர்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படும் என்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், CM இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
News January 19, 2026
பொங்கல் ரிலீஸ் படங்களின் ரிப்போர்ட் என்ன?

இந்த பொங்கலுக்கு வெளியான பெரிய பட்ஜெட் படமான சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ கலவையான விமர்சனங்களை பெற்றது. 9 நாள்களில் இந்த படம் உலகளவில் ₹84 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்ற கார்த்தியின் ‘வா வாத்தியார்’ 5 நாள்களில் ₹12.5 கோடியை வசூலித்துள்ளதாம். சர்ப்ரைஸ் என்ட்ரியாக நுழைந்த ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் இதுவரை ₹11 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம்.


