News April 13, 2024

TMB பரிந்துரையை நிராகரித்தது ரிசர்வ் வங்கி

image

நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிகளுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்மொழிந்த 3 பேரை தகுதி அடிப்படையில் ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது. இதற்கு முன்னதாக MD மற்றும் CEO பொறுப்பு வகித்த கிருஷ்ணன் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். டாக்ஸி ஓட்டுநரின் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.

Similar News

News November 9, 2025

பாக்., ராணுவத்தில் முக்கிய மாற்றம்

image

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவிடம் பாடம் கற்ற பாகிஸ்தான், அதன் அடிப்படையில் ராணுவத்தில் புதிய மாற்றத்தை முன்னெடுத்துள்ளது. இந்தியாவின் முப்படை தலைமை தளபதி (CDS) பதவியை போல, ஒரு தலைமை தளபதி (CDF) பதவியை உருவாக்க உள்ளது. இதன்மூலம், தற்போது பாக்., அரசு & அதிபரிடம் உள்ள ராணுவத்தின் மீதான அதிகாரங்களும் CDF-க்கு மாற்றப்படும். தற்போதைய தளபதியான ஆசிம் முனீர் CDF ஆக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

News November 9, 2025

சிறப்பான கூட்டணி அமையும்: இபிஎஸ்

image

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என EPS தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை எனத் தெரிவித்த அவர், திமுக கூட்டணியை நம்புகிறது, அதிமுக மக்களை நம்புகிறது எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் ₹10 லட்சம் கோடி தொழில் முதலீடு என்பது பொய்யான தகவல் என்றும், ₹68,570 கோடி அளவிலான முதலீடுகளே ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் EPS குற்றஞ்சாட்டினார்.

News November 9, 2025

ராசி பலன்கள் (09.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!