News September 21, 2025
இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறியுள்ளது. மேலும், காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
Similar News
News September 21, 2025
இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி: PM மோடி

நாளை (செப்.22), நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக PM மோடி தன் பேச்சில் தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் இந்த விழாக்காலத்தில் இருந்து பயன்பெறத் தொடங்குவர் என்ற அவர், சுயசார்பு இந்தியாவை நோக்கிய மிகப்பெரிய அடியை எடுத்து வைப்பதாக கூறினார். மேலும், இந்த வரிச் சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றார்.
News September 21, 2025
BREAKING: நாட்டு மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மோடி!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் மிகப்பெரிய சேமிப்பு திருவிழா என மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நாட்டு மக்கள் 2.5 லட்சம் கோடியை சேமிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரிகள் ஜிஎஸ்டியால் நீக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய ஜிஎஸ்டி சீர்திருத்தம் பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
News September 21, 2025
கோடிக்கணக்கான குடும்பங்களில் மகிழ்ச்சி: மோடி

நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் நவராத்திரியின் முதல் நாளான நாளை முதல் அமலுக்கு வருவதாக குறிப்பிட்டார். இதன்மூலம், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு மகிழ்ச்சி என்றும் அவர்களது சேமிப்பு அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பயனடைய இருப்பதாகவும் மோடி கூறினார்.