News October 9, 2025
சண்டே ரயில்வே ஸ்டேஷனே இயங்காது.. எங்கு தெரியுமா?

மேற்கு வங்கத்தில் உள்ள ‘ரேநகர்’ ரயில் நிலையம் தான் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுகிறது. இங்கு நிற்கும் ஒரே பயணிகள் ரயிலான பான்குரா-மாசகிராம் எக்ஸ்பிரஸ், ஞாயிறு அன்று இயங்காததால் இந்த ரயில் நிலையம் மூடப்படுகிறதாம். அதேநேரம், இங்கு விநியோகிக்கப்படும் டிக்கெட்களை வாங்க, ஞாயிறு அன்று ரயில் நிலைய மேலாளர் பர்தாமன் நகருக்கு செல்வதால் அன்று ரயில் இயங்குவதில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Similar News
News October 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 9, புரட்டாசி 23 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 01:00 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை
News October 9, 2025
Cinema Roundup: ‘பைசன்’ படத்திற்கு U/A சான்று

*துருவ் விக்ரமின் ‘பைசன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. *தெலுங்கில் ‘பைசன்’ படம் அக்.24-ம் தேதி வெளியாகிறது. *துல்கர் சல்மானின் படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ₹3 கோடி சம்பளம் பெற்றதாக தகவல். * கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ அக்.23-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் என தகவல்.
News October 9, 2025
20 குழந்தைகள் மரணம்: எச்சரித்த மத்திய அரசு

ம.பி., மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடைசி 24 மணிநேரத்தில் 4 மரணங்கள் பதிவான நிலையில், அனைத்து மாநிலங்கள், யூ.பிரதேசங்களுக்கு மத்திய பொது சுகாதார துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, அனைத்து மூலப் பொருள்களையும், தயாரிக்கப்பட்ட மருந்துகளையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.