News June 19, 2024

பூரண மதுவிலக்கில் உள்ள சிக்கல்? (1/3)

image

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது. ஆனால், ஒரே நாளில் பூரண மது விலக்கை அமல்படுத்துவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் பிஹார், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் மது விலக்கு அமலில் உள்ளது. அதே நேரம், அந்த மாநிலங்களில் போலி மதுபானங்கள், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Similar News

News March 22, 2026

திண்டிவனம்: அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்!

image

விழுப்புரம் மாவட்ட தேமுதிக துணைச் செயலாளர்
லதா மற்றும் தேமுதிகவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மகளிர் அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர், மாநிலங்களவை உறுப்பினர் முன்னாள் அமைச்சர்
சிவி. சண்முகம் தலைமையில் திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நேற்று (மார்ச்.21) அஇதிமுக-வில் இணைந்தனர். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

News March 22, 2026

இந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி தீர்மானம்

image

1971, மார்ச் 25-ல் பாக்., ராணுவம், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் இணைந்து வங்காள இந்துக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்களை ‘போர்க்குற்றங்கள் & இனப்படுகொலை’ என வரையறுக்கக் கோரி US பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. சபை உறுப்பினர் லேண்ட்ஸ்மேன் முன்மொழிந்த இதில், ‘Operation Searchlight’ என்ற பெயரில் கிழக்கு பாக்., முழுவதும் இக்கொடூரம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 22, 2026

விஜய்க்கு எதிராக CPM களமிறங்குகிறதா?

image

திமுக – CPM தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், சென்னை (அ) புறநகரில் ஏதாவது ஒரு தொகுதியை CPM கேட்கிறதாம். குறிப்பாக, 2001 – 2016 வரையிலான 3 தேர்தல்களில் பெரம்பூரில் CPM வெற்றி பெற்றுள்ளதால், தற்போதும் அங்கு CPM-க்கான செல்வாக்கு உள்ளதாக திமுகவிடம் கட்சி முன்வைத்துள்ளதாம். பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட முனைப்பு காட்டுவதாக கூறப்படும் நிலையில், இத்தகவல் பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!