News March 27, 2025
வீர தீர சூரன் படத்திற்கான சிக்கல் நீங்கியது…!

விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட 4 வாரங்கள் விதிக்கப்பட்டிருந்த தடையை டெல்லி ஐகோர்ட் நீக்கியுள்ளது. ஓடிடி உரிமம் விற்கப்படும் முன்பு படம் வெளியிடப்படுவதை எதிர்த்து B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கில் முதலில் தடை விதித்த ஐகோர்ட், இப்போது அந்த தடையை நீக்கியுள்ளது. இதனால், இன்று மாலை படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 6, 2025
மூட்டி வலி நீங்க இந்த கஷாயம் குடிங்க!

கை, கால், கழுத்து & மூட்டு வலி நீங்க இந்த கஷாயத்தை பருகும் படி, சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ◆தேவை: வரமல்லி, சீரகம், சோம்பு ◆செய்முறை: மேலே குறிப்பிட்ட மூன்றையும் தண்ணீரில் போட்டு, மிதமான தீயில் 3-5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி காலையில் குடித்து வந்தால், மூட்டு வலியை நீக்குவதுடன், அஜீரண கோளாறில் இருந்தும் நிவாரணம் பெறலாம். அனைத்து நண்பர்களுக்கும் இதை பகிரவும்.
News November 6, 2025
திமுக ஆட்சியில் எனக்கு நெருக்கடி: செல்வப்பெருந்தகை

விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும் கூட ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதில்லை என செல்வப்பெருந்தகை வருத்தம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி, இந்தியா கூட்டணி ஆட்சி, நம்முடைய ஆட்சி என சொல்கிறோம், ஆனால் அந்த ஆட்சி என்னை எத்தனை முறை கைது செய்திருக்கிறது என கேட்டுப்பாருங்கள் என பேசியுள்ளார். மேலும், இதுவரை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டபோது 20 முறை தான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
மழை வெளுத்து வாங்கும்

கனமழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், நெல்லை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. எனவே பள்ளி, கல்லூரி, ஆபீஸுக்கு செல்பவர்கள் குடைகள், ரெயின் கோட்டை எடுத்து செல்ல மறக்காதீங்க மக்களே!


