News April 16, 2024
சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய முதல்வர்

வாக்கு சேகரிப்பின் போது முதல்வர் ஸ்டாலின் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூரில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது மைதானம் ஒன்றில் சிறுவர்களுடன் சில நிமிடங்கள் கால்பந்து விளையாடினார். முதல்வரை கண்டதும் சிறுவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். சிலர் தங்களது கால்பந்தில் அவரிடம் கையெழுத்து பெற்றுச் சென்றனர்.
Similar News
News November 13, 2025
CINEMA ROUNDUP: ‘பராசக்தி’ படத்தில் இணைந்தார் யுவன்!

*நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவியின் செல்போனை ஹேக் செய்தவர் கைது செய்யப்பட்டார். *கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது .
*அர்ஜுனின் ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.
*ஜிவி இசையமைக்கும் ‘பராசக்தி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.
News November 13, 2025
தூய்மை பணியாளர்களை ஒடுக்கும் அரசு: டிடிவி தினகரன்

தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை, ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயல் என TTV தினகரன் சாடியுள்ளார். சென்னை, கோவை, தூத்துக்குடி என பல பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கும் பணியாளர்களை அடக்கி ஒடுக்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 13, 2025
8,858 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உள்ளிட்ட 8,858 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு (சில பதவிகளுக்கு மட்டும்). வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹19,900 முதல் ₹35,400 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.27. விண்ணப்பிக்க இங்கே <


