News May 17, 2024
முதல்வரை பார்த்து பிரதமர் கற்றுக்கொள்ள வேண்டும்

பிரதமர் மோடி அனைத்து மக்களுக்குமான பிரதமராக இருக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஜாதி, மதம், இனம் பாகுபாடின்றி பொதுவானவராக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை போல் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். மேலும், ஜூன் 6ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அதுவரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாது எனக் கூறினார்.
Similar News
News December 28, 2025
முதல்வரை விஜய் நையாண்டி செய்வது தவறு: வேல்முருகன்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனும் ஓடும் என கூறும் விஜய், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்காதது ஏன் என தவாக தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். கேலி செய்யும் நோக்கில் முதல்வரை சார், அங்கிள் என அழைப்பது சரியல்ல எனவும் சாடியுள்ளார். மேலும் CM-ஐ விமர்சிக்கும் விஜய், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும் மதவாத கும்பல்களை கண்டிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 28, 2025
நண்பர் அஜித் என குறிப்பிட்டு பேசிய விஜய்..!

சினிமாவில் நேரெதிர் துருவமாக இருந்தாலும், அஜித் – விஜய் இடையே நல்ல நட்பு உள்ளது. ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் ‘நண்பர் அஜித்’ என விஜய் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். நண்பர் அஜித் நடித்த பில்லா மற்றும் காவலன், குருவி என பல படங்களின் ஷூட்டிங் இங்கு நடைபெற்றிருக்கிறது என அவர் தெரிவித்தார். ‘மாஸ்டர்’ பட நிகழ்ச்சியிலும், நண்பர் அஜித் போல் கோட் அணிந்திருப்பதாக விஜய் பேசியது குறிப்பிடத்தக்கது.
News December 28, 2025
ராசி பலன்கள் (28.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


