News April 24, 2024

சர்ச்சையாக பேசுவதை பிரதமர் தவிர்க்க வேண்டும்

image

இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேஷ கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்துவது உகந்ததல்ல. இதுபோன்ற கருத்துகள் சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 2, 2026

BREAKING: தங்கம் விலை மிகப்பெரிய மாற்றம்

image

தங்கம் விலை இன்று (ஜன.2) 22 கேரட் கிராமுக்கு ₹140 உயர்ந்து ₹12,580-க்கும், சவரன் ₹1,120 உயர்ந்து ₹1,00,640-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாள் தங்கம் விலை சரிவுடன் தொடங்கிய நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

News January 2, 2026

ரகசியங்களை பகிர்ந்த இந்தியா – பாகிஸ்தான்

image

இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஒவ்வொரு ஆண்டும் ஜன.1-ம் தேதி தங்களிடம் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என 1988-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. மோதல் ஏற்படும்போது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்கும் விதமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், ஒப்பந்தத்தின் படி நேற்று இருநாடுகளும், அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டன.

News January 2, 2026

அதிமுக விருப்ப மனு மூலம் ₹15.26 கோடி

image

2026 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனு ஒன்றிற்கு ₹15,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன்படி பார்த்தால், விருப்ப மனுக்கள் மூலம் அதிமுகவுக்கு ₹15.26 கோடி (15 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்) கிடைத்துள்ளது. குறிப்பாக, EPS போட்டியிட வேண்டும் என 2,187 மனுக்கள் பெறப்பட்டதன் மூலம் 3 கோடியே 28 லட்சத்து 5 ஆயிரம் கிடைத்துள்ளது.

error: Content is protected !!