News May 1, 2024

காங்கிரஸைப் பற்றி பேச பிரதமருக்கு அருகதை இல்லை

image

காங்கிரஸைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் கிடையாது என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், “பிரதமர் மோடி, நாட்டின் 45% சொத்துக்களை 20, 25 தொழிலதிபர்களுக்கு கொடுத்து, அதற்கு பிரதிபலனாக ₹8,000 கோடியை தேர்தல் பத்திர நன்கொடையாக பெற்றவர். அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டை கொள்ளையடிக்கும் என்று கூறுவது விந்தையாக இருக்கிறது” என்றார்.

Similar News

News February 7, 2026

ராசி பலன்கள் (07.02.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 7, 2026

U19 பைனலில் 5 விக்கெட்கள் வீழ்த்திய தமிழர்கள்

image

U19 WC-ல் பைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா <<19069828>>கோப்பையை கைப்பற்றியது<<>>. இந்தியாவின் வெற்றிக்கு தமிழர்கள் இருவர் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த அம்ரிஷ் 3 விக்கெட்டும், மற்றொரு தமிழக வீரரான தீபேஷ் தேவேந்திரன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியை 311 ரன்களில் சுருட்ட உதவிய தமிழர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

News February 7, 2026

BREAKING: தேர்தல்.. முடிவை மாற்றினார் விஜய்

image

தவெக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற பனையூர் அலுவலகத்தில் இன்று குவிந்தனர். அப்போது வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் அப்பகுதிவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், இனி யாரும் பனையூர் அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனவும், இணையத்தில் விருப்ப மனுவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆனந்த் அறிவித்துள்ளார். அப்பகுதி மக்களின் அதிருப்தியால் விஜய் இம்முடிவை எடுத்துள்ளார்.

error: Content is protected !!