News May 7, 2025
பிரதமர் ஒரு போராளி: ரஜினி புகழாரம்

மும்பையில் WAVES உச்சிமாநாட்டில் பேசிய நடிகர் ரஜினி, ‘எந்த சவாலையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர் பிரதமர் மோடி’ என்று புகழாரம் சூடியுள்ளார். பிரதமர் ஒரு போராளி, அவரின் திறமையை ஒரு தசாப்தமாக நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம் எனக் கூறிய ரஜினி, பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் தக்க பதிலடி கொடுப்பார். காஷ்மீரில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 17, 2025
இந்தியாவிடம் தோற்றதால் பாக்., கேப்டனுக்கு கிடைத்த தண்டனை

ஆசிய கோப்பையில் இந்தியாவுடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், பாக்., கேப்டன் சல்மான் அலி அகாவை, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க PCB முடிவு செய்துள்ளது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஷதாப் கானை T20 கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026-ல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள T20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாம்.
News October 17, 2025
ஆப்கன் அடி தாங்காமல் டிரம்பிடம் சரணடைந்த பாக்.,

ஆப்கன் உடனான போரை தீர்த்து வைக்க டிரம்ப் முன் வந்தால், அதை மனமுவந்து வரவேற்பதாக பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார். முந்தைய அமெரிக்க அதிபர்கள் போர் வெறியர்களாக இருந்ததாகவும், டிரம்ப் மட்டும் அமைதியின் திருவுருவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆப்கன் அமைச்சரின் இந்திய பயணத்தை சுட்டிக்காட்டி, இந்தியா சொல் கேட்டு தான் ஆப்கன் போரில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
News October 17, 2025
சாக்ரடீஸ் பொன்மொழிகள்

*உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதே உண்மையான ஞானம். *வீழ்வது தோல்வி அல்ல. வீழ்ந்த இடத்திலேயே வீழ்ந்தே கிடக்கும் போது தான் தோல்வி வரும். *இந்தப் பிரபஞ்சம் கோழைகளுக்கு சாதகமாக இருக்காது. *எல்லாப் போர்களும் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன. *திடீரென்று மாறும் ஒருவருக்காக கவலைப்படாதீர்கள். அவர் தனது நடிப்பைக் கைவிட்டு, தனது உண்மையான சுயத்திற்குத் திரும்பியிருக்கலாம்.