News June 27, 2024
காய்கறிகளின் விலை குறைவு

வரத்து அதிகரித்ததன் காரணமாக காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம், பீட்ரூட் கிலோ ₹50க்கும் குறைவாக விற்கப்படுகிறது. கடந்த வாரம் கிலோ ₹180 வரை விற்பனையான பீன்ஸ் இன்று ₹90க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் கிலோ 120க்கு விற்கப்பட்ட அவரைக்காய், இன்று ₹90க்கு விற்கப்படுகிறது. விலை குறைந்ததால், பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
Similar News
News March 2, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (01.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
OPS திமுகவில் இணைந்தது வேதனை அளிக்கிறது: KAS

தவெகவிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட OPS, திமுகவில் இணைந்தது செங்கோட்டையனுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் OPS திமுகவில் இணைந்தது வேதனைக்குரியது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதா மீது வழக்கு போட்டவர்கள் திமுகவினர் என்பதை OPS சிந்தித்து பார்த்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 2, 2026
48 முக்கிய தலைவர்களை கொன்றுள்ளோம்: டிரம்ப்

ஈரான் மீதான அமெரிக்க ராணுவத் தாக்குதல்களில் ஈரான் உயர் தலைவர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்களை கொன்றுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் திட்டமிட்டதை விட ஈரான் மீதான தாக்குதல் வேகமாக, மிக சிறப்பாகவே நடைபெறுகிறது என்று கூறியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவது பற்றியோ, எண்ணெய் விலை உயர்வது பற்றியோ கவலையில்லை எனவும் பேசியிருந்தார்.


