News December 5, 2024
காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு

மழை காரணமாக தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. சென்னையில் முருங்கைக்காய் 1 கிலோ ₹400க்கும், சில்லறை விற்பனையில் ₹500க்கும், ஒரு முருங்கை ₹45-55க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு 1 கிலோ சில்லறை விலையில் ₹500க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ₹90க்கும், சின்ன வெங்காயம் ₹80க்கும் விற்கப்படுகிறது. வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
Similar News
News November 20, 2025
3 மாதம் செல்போன் ரீசார்ஜ் இலவசம்.. SCAM ALERT

பிஹாரில் NDA கூட்டணி வெற்றிபெற்றதை கொண்டாடும் விதமாக, அனைவருக்கும் 3 மாதம் செல்போன் ரீசார்ஜ் இலவசம் என PM மோடி அறிவித்திருக்கிறாராம். இப்படியொரு செய்தி வாட்ஸ்ஆப்பில் பரவி வருகிறது. இது உண்மையில்லை என மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அரசு இதுபோன்று எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உஷாரா இருங்க, எந்த லிங்க்கையும் கிளிக் பண்ணாதீங்க மக்களே!
News November 20, 2025
தலைவராகும் முன் என்ன செய்தனர்? PHOTOS

பிரபல உலக தலைவர்களில் பலரும் தங்களது ஆரம்பகால வாழ்க்கையை சிறியதாக தொடங்கி, இன்று பெரிய தலைவர்களாக உருவெடுத்துள்ளனர். அவர்கள், ஆரம்பத்தில் என்ன வேலை செய்தனர் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை ஆச்சரியப்படுத்திய தகவல் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 20, 2025
டெல்லிக்கு பயணிப்பதற்கு கூட அச்சமாக உள்ளது: உமர்

J&K பதிவெண் கொண்ட வாகனத்தில் டெல்லிக்கு பயணிப்பதற்கு கூட தற்போது அச்சமாக இருப்பதாக அம்மாநில CM உமர் அப்துல்லா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லி கார் குண்டுவெடிப்பிற்கு வெகுசிலரே காரணம், ஆனால் ஒட்டுமொத்த காஷ்மீரிகளும் அந்த பழியை சுமப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


