News July 18, 2024
நெல்லையில் தக்காளி விலை குறைந்தது

நெல்லையில் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை ஏற்றத்தில் இருந்தது. இதனால், உழவர் சந்தையில் கிலோ ரூ.78க்கும், வெளிச் சந்தையில் ரூ.100 வரையும் விற்பனையானது. இந்த நிலையில், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் இன்று விலை சற்று குறைய தொடங்கியுள்ளது. நெல்லை உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.8 குறைந்து 70 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் ரூ.10 முதல் ரூ.15 வரை கிலோவிற்கு குறைந்துள்ளது.
Similar News
News January 28, 2026
நெல்லை அருகே விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

வள்ளியூர் கோட்டையடி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(22). இவர் நேற்று வள்ளியூரில் இருந்து நெல்லைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மூன்றடைப்பு வாகைகுளம் அருகே வந்த போது பைக் மீது டிராக்டர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 28, 2026
நெல்லை வாக்காளர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. ஏற்புரைகள், மறுப்புரைகள் தாக்கல் செய்ய ஜன.30 கடைசி நாளாகும். எனவே 30-ஆம் தேதிக்குள் உரிய படிவங்களை ஆவணவங்களோடு அளித்து இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
இது நம்ம ஆட்டம் போட்டிகள் கலெக்டர் அறிவிப்பு

இது நம்ம ஆட்டம் 2026 நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதலிடம் வெற்றி பெற்றவர்களுக்கு 30ஆம் தேதி விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 31 ஆம் தேதி காலை 7 மணிக்கு பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெறும் மாவட்ட அளவில் கலந்து கொள்பவர்கள் 16- 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் ஆதார் அட்டை வயது சான்று ரேஷன் நகல் உடன் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.


