News January 11, 2025
இந்த ஆட்டின் விலை ஜஸ்ட் ₹13.6 லட்சம்தான்!

விலையை கேட்டதும் ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம், அது உண்மைதான். இது சாதாரண ஆடு இல்லை. இதனுடைய சிறப்பம்சத்திற்காகவே இந்த விலை. இந்த ஆடு மற்ற ஆடுகளைக் காட்டிலும் மிக நீளமான காதுகளை கொண்டிருக்கிறது. அதற்காகவே, சவுதி அரேபியாவில் நடந்த ஏலத்தில், 60,000 சவுதி ரியால்ஸுக்கு (இந்திய மதிப்பில் ₹13.60 லட்சம்) விலை போயுள்ளது. இதன் காரணமாகவே, இந்த ஆட்டின் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
Similar News
News February 16, 2026
சமையல் உப்பில் சுண்ணாம்பா.. கண்டுபிடிப்பது எப்படி?

உப்பில் கூடவா கலப்படம் என நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மைதான் என TN உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கிறது. உப்பில் கலப்படம் உள்ளதா என்பதை அறிய இந்த ட்ரிக்ஸை பாலோ பண்ணுங்க. தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பை போட்டு நன்றாக கலக்கவும். *சுத்தமான உப்பு என்றால், தண்ணீர் தெளிவாக இருக்கும் *கலப்படமானது என்றால் தண்ணீர் மங்கலாகி, கிளாஸின் அடியில் தூசி போன்ற படிமன் தங்கும். இந்த விழிப்புணர்வு பதிவை பகிரவும்.
News February 16, 2026
BIG NEWS: முக்கிய ரகசியம் கசிந்தது.. CM ஸ்டாலின் கோபம்

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் சலசலப்புக்கு காரணமான இ-மெயில் இணையத்தில் கசிந்துள்ளது. டெல்லி தலைமைக்கு தமிழக நிர்வாகிகள் அனுப்பிய கடிதத்தில், ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள், வாரிய தலைவர், உள்ளாட்சியில் கூடுதல் இடங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது, CM ஸ்டாலினை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது. இந்த இ-மெயில் SM-ல் கசிந்த சில மணிநேரங்களில் <<19156779>>செல்வப்பெருந்தகை<<>> டெல்லி விரைந்துள்ளார்.
News February 16, 2026
ஆந்திரா CM உடன் பில்கேட்ஸ் முக்கிய பேச்சுவார்த்தை!

கேட்ஸ் அறக்கட்டளை தலைவரான பில்கேட்ஸ் ஆந்திராவுக்கு வருகை தந்துள்ளார். அவர் அமராவதி சென்ற நிலையில், அங்கு அம்மாநில CM சந்திரபாபு நாயுடு, DCM பவன் கல்யாணுடன் சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முன்னதாக மோசமான வானிலை காரணமாக அரை மணிநேரம் அவர் வந்த விமானம் வானத்தில் வட்டமிட்டதால் சிறிது பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


