News March 26, 2025
இனி இந்த மாத்திரைகளின் விலை உயரும்!

சர்க்கரை வியாதி, இதயநோய் மற்றும் கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை 1.7% அதிகரிக்க உள்ளது. மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களின் தொடர் விலையேற்றத்தால், மருந்து நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவாலைப் போக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக AIOCD பொதுச்செயலாளர் ராஜீவ் சிங்கால் தெரிவித்துள்ளார். இந்த விலையேற்றம் 2- 3 மாதங்களில் அமலுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News December 9, 2025
திமுக நிர்வாகி மறைவு: ஸ்டாலின் இரங்கல்

பவானி திமுக நகரச் செயலாளர் பா.சி.நாகராஜன் காலமானார். இந்நிலையில், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி நிகழ்வுகளை பாங்குடன் ஒருங்கிணைப்பதில் நாகராஜன் ஆர்வத்துடன் செயல்பட்டவர் என்று நினைவுகூர்ந்துள்ளார். கால்நூற்றாண்டு காலம் திமுகவில் பயணித்த அவருக்கு சிறந்த நகர செயலாளர் விருது வழங்கியதையும் குறிப்பிட்டு ஸ்டாலின் நெகிழ்ந்துள்ளார்.
News December 9, 2025
FLASH: பங்குச்சந்தைகள் கடும் சரிவு

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-வது நாளாக கடும் வீழ்ச்சியை கண்டுள்ளன. சென்செக்ஸ் நேற்று 600 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்றும் 682 புள்ளிகள் சரிந்து 84,682 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 229 புள்ளிகள் சரிந்து 25,730 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. Shriram Finance, Asian Paints, TCS உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் 5% வரை சரிவைக் கண்டுள்ளன.
News December 9, 2025
வாழ்த்து கூறி கூட்டணியை உறுதி செய்த ஸ்டாலின்

சமீபகாலமாக காங்., தலைவர்கள் அடுத்தடுத்து விஜய், SAC-யை சந்தித்ததால், தவெக கூட்டணியில் காங்., இணையலாம் என பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, கூட்டணி வலுவாக இருப்பதை CM ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவிற்கான கூட்டு முயற்சிகளை சோனியாவின் கொள்கை ரீதியான பாதையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும் என தெரிவித்துள்ளார்.


