News September 5, 2025

இந்த பைக்குகளின் விலை உயரப்போகுது!

image

350 CC-க்கு அதிகமான திறன் கொண்ட பைக்குகளின் GST 40% உயர்த்தப்பட்டுள்ளதால், மார்க்கெட்டில் பல பைக்குகளின் விலை உயரப்போகின்றன. இதனால், பைக் விற்பனையில் பெரிய மாற்றங்களும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. *Royal Enfield: Himalayan 450, Interceptor 650, Continental GT 650 *Bajaj Dominar 400 *KTM Duke 390, RC 390, Adventure 390 *Kawasaki: Ninja 400, Z650 *Honda: CB500X.

Similar News

News March 27, 2026

மீண்டும் விநாயக் மகாதேவ்.. வெங்கட் பிரபு தீவிரம்!

image

அஜித் கேரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த ‘மங்காத்தா’ படத்தின் பார்ட் -2 வேலைகளில் இயக்குநர் வெங்கட் பிரபு தீவிரம் காட்டி வருகிறாராம். ஆதிக், சிறுத்தை சிவா ஆகியோரின் படங்களை முடித்த கையுடன் அஜித், ‘மங்காத்தா 2’ படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், SK-வை வைத்து வெங்கட் பிரபு இயக்கவிருந்த படம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. விநாயக் மகாதேவ் இம்முறையும் பந்தயம் அடிப்பாரா?

News March 27, 2026

விலை மளமளவென குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கேஸ் தட்டுப்பாடால் காய்கறிகள் வாங்குவதை ஹோட்டல்கள் கணிசமாக குறைத்துள்ளன. அதேநேரம், விளைச்சல் அதிகரிப்பால் தக்காளியின் வரத்தும் உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்துள்ளது. கோயம்பேடு, ஒசூர், மதுரை, நெல்லை சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹10-க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் கிலோ தக்காளி ₹20 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், பாதிக்கு பாதி குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 27, 2026

அதிமுக கூட்டணியில் மரியாதை இல்லை: LK சுதீஷ்

image

திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு மரியாதை இல்லை, அதிமுக கூட்டணியில் அனைவரும் சுதந்திரமாக செயல்படுவதாக EPS பேசியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள LK சுதீஷ், அதி​முக கூட்​ட​ணி​யில் கட்​சிகளுக்கு உரிய மரி​யாதை கிடைப்​ப​தாக EPS கூறு​வது உண்மையில்லை எனத் தெரிவித்தார். தற்​போதைய சூழலில் திமுக உடனான தொகு​திப் பங்​கீடு திருப்தியாக இருக்​கிறது என்றும் அவர் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!