News March 18, 2025
‘DD 5’ பேன்ஸி நம்பரின் விலை ₹82 கோடி!

தங்களது சொகுசு காருக்கு பேன்ஸி நம்பர் வாங்குவது பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், துபாயைச் சேர்ந்தவர்கள் இதில் ஒரு படி மேல். முகமது பிங்கட்டி என்ற தொழிலதிபர், தனது குழுவை, கார் நம்பருக்கான ஏலம் எடுப்பதற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு ‘DD 5’ என்ற பேன்ஸி நம்பரை ₹82 கோடிக்கு அந்த குழு ஏலம் எடுத்துள்ளது. கார் நம்பருக்காக ஏலத்தில் இவ்வளவு தொகை செலவு செய்வது இதுவே முதல்முறை.
Similar News
News March 19, 2025
2 மனைவிகள் இருந்தும் சிறுமி வன்கொடுமை.. அதிரடி தீர்ப்பு

காஞ்சிபுரம் அருகே 2 மனைவிகள் இருந்தும் 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கொடூரன் ஜெயபால், கடந்த 2019இல் தனது மனைவிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். ஜெயபாலுக்கு ₹15,000 அபராதமும் விதித்துள்ள கோர்ட், சிறுமிக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
News March 19, 2025
கரும்பு டன்னுக்கு ₹4,000 உதவித்தொகை: அரசு அறிவிப்பு

வரும் ஆண்டில் இருந்து ஒரு டன் கரும்புக்கு ₹4,000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கரும்பு ஊக்கத்தொகை குறித்த அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், நிலுவையில் இல்லாமல் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 19, 2025
தஞ்சை துக்காச்சியம்மன் கோயிலுக்கு UNESCO விருது

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள துக்காச்சியம்மன் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி கெளரவித்துள்ளது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் தொன்மை மாறாமல், புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், விருது வழங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் துர்கை அம்மன் இறைவனை வழிபட்டதால், துர்க்கை ஆட்சி என்ற பெயர் துக்காச்சி என மருவியதாக சொல்லப்படுகிறது.