News March 16, 2024
கடலூரில் அரிசி விலை கிடு., கிடு உயர்வு!

கடலூரில் கடந்த சில நாட்களாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதேபோல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வரத்து குறைந்ததுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூரில் கடந்த மாதம் ரூ.52-க்கு விற்ற ஒரு கிலோ பொன்னி புழுங்கல் தற்போது 60-க்கு விற்கப்படுகிறது.
Similar News
News January 24, 2026
கடலூர்: தைப்பூச ஜோதி தரிசனம் நேரம் அறிவிப்பு

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணி, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, பின்னர் பிப்ரவரி 2-ம் தேதி காலை 5:30 மணி என 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.
News January 24, 2026
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.23) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.24) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.