News March 18, 2024
ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

கடந்த வாரம் உச்சம் சென்ற ஆபரணத் தங்கத்தின் விலை மெல்லமெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.48,720க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,090க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.80க்கும், கிலோ வெள்ளி ரூ.300 குறைந்து ரூ.80,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News July 6, 2025
ஆண்களை பாதிக்கும் லேப்டாப், பைக்: டாக்டர் கூறும் அட்வைஸ்

ஆண்கள் நீண்ட நேரம் மடியில் வைத்து மடிக்கணினி(Laptop) பயன்படுத்துவது விந்து பைகளை பாதிக்கும் என பாலியல் சிகிச்சை நிபுணர் காமராஜ் எச்சரித்துள்ளார். மேலும், இருசக்கர வாகனங்களை 1 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து ஓட்டக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அனைவரும் உணவு, உணர்வு, உடற்பயிற்சி, உறக்கம், உடலுறவு ஆகியவற்றில் சீரான கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். PLEASE TAKE CARE BOSS..!
News July 6, 2025
கர்ப்பிணிகள் மீன் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. தாய்க்கும் மீன்கள் நல்ல ஊட்டச் சத்துகளை வழங்கும். அதே நேரம் பாதரச அளவுகள் குறைவாக உள்ள மீன்களையே தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நெத்திலி, சால்மன், மத்தி, லைட் சூரை, வெங்கணா போன்ற மீன்கள் தாய்க்கும் சேய்க்கும் சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள். எனவே டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பின் சாப்பிடவும்.
News July 6, 2025
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கமா?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை கடுமையாக விமர்சித்ததால் அதிமுகவிலிருந்து <<16962233>>அன்வர் ராஜா<<>>வை இபிஎஸ் நீக்கினார். அதன்பின் இபிஎஸ்ஸிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அண்மையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது மீண்டும் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததை கடுமையாக சாடியிருக்கிறார். இதனால், அவர் மீது இபிஎஸ் நடவடிக்கை ( கட்சியில் இருந்து நீக்கம்) எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.