News April 15, 2024
ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக உச்சத்தில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.520 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 குறைந்து ரூ.54,320க்கும், கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கும், கிலோ வெள்ளி ரூ.89,500க்கும் விற்பனையாகிறது.
Similar News
News November 14, 2025
உதிரி கட்சியாக இருக்கக்கூட ADMK-க்கு தகுதியில்லை: CM

SIR-க்கு எதிராக திமுக SC-ல் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், SIR-க்கு ஆதரவாக கூச்சமே இல்லாமல் அதிமுக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருப்பதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு SIR தொடர்பான நிபந்தனைகளை அதிமுக ஏற்று கொண்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். அதிமுகவிற்கு எதிர் கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக இருக்கக்கூட தகுதியில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
News November 14, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹1,280 குறைந்திருக்கிறது. காலையில் சவரனுக்கு ₹480 குறைந்த நிலையில், மதியம் மேலும் ₹800 சரிந்துள்ளது. சென்னையில் தற்போது 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,740-க்கும், சவரன் ₹93,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு ₹2,400 அதிகரித்த நிலையில், இன்று ₹1,280 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News November 14, 2025
பிஹார் வெற்றியை கொண்டாட வேண்டாம்: பாஜக

பிஹாரில் NDA கூட்டணி முன்னிலையில் உள்ளதால் பாஜகவினர் கொண்டாட தயாராகி வருகின்றனா். இந்நிலையில், டெல்லி வெடிகுண்டு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருப்பதை கருத்தில் கொண்டு வெற்றியை கொண்டாட வேண்டாம் என பாஜக அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் வரை தலைநகர் பாட்னாவில் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என EC அறிவுறுத்தியிருந்தது.


